பவுர்ணமி -செல்வம் செழிக்கும்.
அமாவாசை-குடும்ப விருத்தி.
கிருத்திகை-முருகன் அருள் கிட்டும்.
ஏகாதசி-மன அமைதி.
சஷ்டி-சந்ததி பெருகும்
சதுர்த்தி-இங்கரன் அருள் கிட்டும்
சிவராத்திரி-பாப விமோசனம்
தசமி-வெற்றி கிட்டும்
வரலக்ஷ்மி,கவுரி நோன்பு-தீர்க்க சுமங்கலி பாக்கியம்
பஞ்சமி-லக்ஷ்மி கடாட்சம்
திருவாதிரை-சிவயோகம் கிட்டும்
திரிதியை நாட்களில் ஆற்ற வேண்டிய விரதங்கள்.
சவுபாக்கிய சயன விரதம்
சித்திரை,வைகாசி,புரட்டாசி,மார்கழி வளர்பிறை,திரிதிய நாட்களில் தொடங்கலாம்.24 அந்தணர்களுக்கு உணவிடுவது விசேஷம்.
சவுபாக்கிய விரதம்
பங்குனி மாதம் வளர்பிறை திருதியை ல் தொடங்கி வருடம் முழுவதும் இருக்க வேண்டிய விரதம்.
எல்லா வகையான பாக்கியங்களையும் தரும் விரதம் இது.உப்பு கலவாத உணவு உன்ன வேண்டும்,அந்தன தம்பதியர்க்கு அறுசுவை உணவு அளிக்க வேண்டும்,தானங்கள் செய்ய வேண்டும்
தமனச விரதம்
சித்திரை வளர்பிறை திருதையில் தொடங்கி,அம்பாளை மரிக்கொழுந்து பூவால் அர்ச்சனை செய்யவேண்டும்.
ஆத்மா திரிதியை விரதம்
மாசி வளர்பிறை திரிதையில் தொடங்கி,மாதம் ஒரு அம்மனை வணங்க வேண்டும்,கவுரி,காளி,உமா,பத்ரா,துர்கை,காந்தி,சரஸ்வதி,வைஷ்ணவி,லக்ஷ்மி,பிரகிருதி,சிவை,நாராயணி யை (மாதம் ஒருவரை )வணங்க வேண்டும்
அவியோக திருதியை விரதம்
மார்கழி திருதியைல் தொடங்க வேண்டும்.இந்த விரதம் இருந்தால் தம்பதியரிடம் அன்னியோன்யம் கூடும்.விருப்பமான தெய்வத்தை வழி படலாம்.
No comments:
Post a Comment