Thursday 10 February 2011

நவக்ரக ஸ்தலங்கள் -சூரியன்


 
 
சூரியனுக்காக தனி கோயில் உள்ள இடம் சூரியனார்கோயில் மட்டும்தான்.குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது.தன்மதானவினோதசதுர்வேதிமங்கலம் என்பது இதன் பழயை பெயர்.குலோத்துங்க சோழ மார்த்தாண்ட ஆலயம் என்பது கோயில்.
#நவக்கிரகங்களும் தனிதனி கருவறையில்,சிவசூரிய நாராயணர் என்ற அமைப்பு-குலோத்துங்க கால கொள் நிலை அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள விசேஷம் இங்கு மட்டும் தான் உள்ளது.
#பொதுவாக நவக்கிரகங்களை ஆயுதங்கள்,வாகனங்கள் தேவியுடன் அமைப்பார்கள்.இங்குள்ள நவக்கிரகங்கள் கையில் எந்த ஆயுதமும் இல்லை.சாந்தரூபியாக அருள் பாலிக்கின்றனர்.
#எல்லா நவக்கிரகங்களுக்கும் பஞ்சலோக விக்கிரகங்கள் உள்ள தளமும் இதுவே.எல்லா விக்கிரகங்களும் தை மாத பிரமொர்ச்சவத்தில் திருவீதி உலா வருவது இங்கு மட்டுமே.
#சூரியனுக்கு திரு கல்யாண உற்சவம் நடை பெறுவது இங்கு மட்டுமே.இதனை தரி சித்தால் திருமணத்தடை அகலும்.
 
சூரியனுக்கு ஆயிரம் திரு நாமங்கள் உண்டு.இதை சகஸ்ர நாம மந்திரம் என்பார்கள்.இந்த ஆயிரம் நாமங்களை ஜெபித்தால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.ஆயிரம் நாமங்களில் விஷேசமானாதாக 21 நாமாக்களை சொல்வார்கள்.இதன் பெயர் சதவ ராஜம் ஆகும்.இந்த 21 நாமாக்களை ஜெபித்தால்,1000 நாமாக்களை ஜெபித்த பலன் கிடைக்கும்.மேலும் மனதாலும் வாக்காலும் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும்.
 காசினி இருளை நீக்கும் கதிரொளி யாகி,எங்கும் 
பூசுற உலகோர் போற்றப் போசிப்புடன்,சுகத்தை நல்கும்
வாசிஏழுடிய தேர் மேல் மகாகிரி வளமாய் வந்த 
தேசிகா எனைரட்சிப்பாய் ,செங்கதிரவனே போற்றி  

No comments:

Post a Comment